உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மின் வாகன சார்ஜிங்: மஹிந்திரா - அதானி கூட்டு

மின் வாகன சார்ஜிங்: மஹிந்திரா - அதானி கூட்டு

புதுடில்லி:நாட்டில் மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை அமைக்க, மஹிந்திரா நிறுவனமும், அதானி குழுமமும் கூட்டு சேர்கின்றன.இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பாளரான மஹிந்தரா, அதானி டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்தின் மின் வாகன பிரிவான 'இமொபிலிட்டி' உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், நாட்டில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டணி, கார்பன் உமிழ்வுகளை குறைத்து, இந்தியாவின் காலநிலை இலக்குகளை அடைய உதவும் எனவும், இதன் வாயிலாக மஹிந்தரா எக்ஸ்.யு.வி., 400 வாடிக்கையாளர்கள், தற்போது 1,100க்கும் மேற்பட்ட சார்ஜர்களை அணுக முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்