உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஜெமினி ஏஐ செயலி அறிமுகம்

தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஜெமினி ஏஐ செயலி அறிமுகம்

புதுடில்லி:கூகுள் நிறுவனம், தன் செயற்கை நுண்ணறிவு செயலியான 'ஜெமினி ஏ.ஐ.,'யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது 'எக்ஸ்' வலைதளப் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கூகுள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினியை உருவாக்கியுள்ளது.இது ஆங்கிலம் உட்பட தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி மற்றும் உருது ஆகிய இந்தியாவின் 9 உள்நாட்டு மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பயனர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியாகிஉள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது, கணிதம், இயற்பியல், வரலாறு, மருத்துவம் என 57 வகையான பாடப்பிரிவுகளில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை