உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.8.68 கோடிக்கு யோகா துணிகள் விற்று காதி நிறுவனம் சாதனை

ரூ.8.68 கோடிக்கு யோகா துணிகள் விற்று காதி நிறுவனம் சாதனை

சென்னை:சர்வதேச யோகா தினத்தையொட்டி, பல்வேறு அரசு துறைகளுக்கு, 8.68 கோடி ரூபாய் மதிப்பிலான யோகா துணிகள் மற்றும் தரை விரிப்புகளை காதி நிறுவனம் விற்றுள்ளது. சர்வதேச யோகா தினம், கடந்த 21ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், 55 காதி நிலையங்கள் வழியே, அரசின் பல்வேறு துறைகளுக்கு, 8.68 கோடி ரூபாய் மதிப்பிலான, ஒரு லட்சத்து 9,022 யோகா தரை விரிப்புகள், 63,700 யோகா ஆடைகளை விற்பனை செய்துள்ளது.இந்த விபரங்களை, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், 'பிரதமரின் வணிகக்குறியீடு ஆற்றல், இந்திய பாரம்பரிய யோகாவை மட்டுமின்றி, காதி பொருட்களையும் பிரபலப்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு யோகாவுக்கான காதிப் பொருட்களின் அமோக விற்பனை, காதி குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது' என்றார்.டில்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள காதி பவன், ஆயுஷ் அமைச்சகத்திற்கு மட்டும், 50,000 யோகா தரை விரிப்புகள் மற்றும் 50,000 யோகா ஆடைகளை வழங்கி உள்ளது. ஸ்ரீநகருக்கு, 25,000 காதி யோகா தரை விரிப்புகள், 10,000 யோகா ஆடைகள் அனுப்பப்பட்டன.யோகா ஆடைகள், 3.87 கோடி ரூபாய்க்கும், யோகா விரிப்புகள், 4.81 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளன. இவற்றை குஜராத், ஹரியானா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், டில்லியில் உள்ள காதி நிறுவனங்கள் சப்ளை செய்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ