| ADDED : ஜூன் 21, 2024 11:42 PM
பெங்களூரு:இந்திய விண்வெளி மற்றும் பாதுகாப்பு மின்னணு நிறுவனமான 'பாரத் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குன ராக மனோஜ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து இந்நிறுவனம் தெரிவித்து உள்ளதாவது:பி.இ., எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற மனோஜ் ஜெயின், 1991ல் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியராக தன் பணியைத் துவங்கினார். பின்னர், இந்நிறுவன 'எலக்ட்ரானிக் வார்பேர்' மற்றும் 'ஏவியானிக்ஸ்' பிரிவின் பொது மேலாளர், தலைமை விஞ்ஞானி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவின் இயக்கு னர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்து, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து உள்ளார்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.