உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எம்.டி.என்.எல்., ரீசார்ஜ் சேவை இனி கிடையாது

எம்.டி.என்.எல்., ரீசார்ஜ் சேவை இனி கிடையாது

புதுடில்லி:பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல்., நிறுவனத்தின் செயல்பாடுகள் விரைவில் முழுதுமாக நிறுத்தப்பட உள்ளது. இந்நிறுவனத்தின் கடனை மறுசீரமைத்து, அதன் செயல்பாடுகளை பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதில் முதல்படியாக தற்போது எம்.டி.என்.எல்.,ன் ரீசார்ஜ் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் வாடிக்கையாளர்கள் இனி ரீசார்ஜ் செய்வதற்கு பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தையே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.டி.என்.எல்., கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித்தவித்து வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை படிப்படியாக குறைக்க, அரசு திட்டமிட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ