உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆர்கானிக் உணவு பொருட்கள்: 100 கடைகள் திறக்கிறது அமுல்

ஆர்கானிக் உணவு பொருட்கள்: 100 கடைகள் திறக்கிறது அமுல்

புதுடில்லி: 'ஆர்கானிக்' உணவுப் பொருட்கள் விற்பனைக்காக, அடுத்த ஓராண்டுக்குள், நாடு முழுவதும் 100 பிரத்யேக கடைகளை 'அமுல்' நிறுவனம் திறக்க உள்ளதாக, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயன் மேத்தா தெரிவித்துஉள்ளார். அமுல் நிறுவனம், ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான பிரத்யேக கடையை, புதுடில்லியில் உள்ள மயூர் விஹாரில் திறந்துள்ளது. இக்கடையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த ஞாயிறன்று திறந்து வைத்தார். இந்த அங்காடி வாயிலாக மாவு, அரிசி மற்றும் பருப்பு போன்ற ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2022ல், கோதுமை மாவை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக, ஆர்கானிக் உணவுத்துறையில் அமுல் நுழைந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது, மாவுகள், உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள், பாசுமதி உள்ளிட்ட பல்வேறு அரிசி வகைகள் என, 25 வகையான ஆர்கானிக் பொருட்களை விற்பனைக்காக அறிமுகம் செய்து உள்ளது. மேலும், ஆர்கானிக் சர்க்கரை, வெல்லம் மற்றும் தேயிலை போன்ற பொருட்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதுடன், அடுத்த ஓராண்டில் ஆர்கானிக் உணவு பொருட்கள் விற்பனைக்காக, இதுபோன்ற 100 கடைகளை நாடு முழுதும் திறக்க உள்ளதாகவும் ஜெயன் மேத்தா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ