உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பான் - ஆதார் இணைப்பு: 31ம் தேதி வரை அவகாசம்

பான் - ஆதார் இணைப்பு: 31ம் தேதி வரை அவகாசம்

புதுடில்லி: கூடுதல் வரி பிடித்தத்தை தவிர்க்க வருகிற, 31ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, பலமுறை நீட்டிக்கப்பட்டு, இறுதியாக, கடந்தாண்டு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதற்கு பின், பான் - ஆதார் இணைப்புக்கு, தாமத கட்டணமாக 1,000 ரூபாய் விதிக்கப்பட்டது. இணைக்கப்படாத பான் எண்கள் செயலற்றதாகி விடும் என்ற எச்சரிக்கையையும் வருமான வரித்துறை விடுத்திருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை மீண்டும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: வரி செலுத்துவோர், தங்களின் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை வருகிற 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இணைக்க தவறும்பட்சத்தில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வரி தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் ஜூன் 31ம் தேதி. இவ்வாறு தெரிவித்து உள்ளது.

602 கோடி ரூபாய் வசூல்

அதிகாரபூர்வ தரவுகளின்படி, கடந்த ஜனவரி 24ம் தேதி நிலவரப்படி, 11.48 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட வில்லை. மேலும், கடந்தாண்டு ஜூலை 1ம் தேதி முதல் நடப்பாண்டு ஜனவரி 31ம் தேதி வரை, பான் மற்றும் ஆதார் இணைப்புக்கான தாமதக் கட்டணமாக 602 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ