| ADDED : ஜூன் 21, 2024 11:30 PM
புதுடில்லி:தேசிய ஒளிபரப்பு கொள்கையை உருவாக்குவதில், அதன் பரிந்துரைகளை 'டிராய்' வழங்கி உள்ளது.என்.பி.பி., எனும் தேசிய ஒளிபரப்பு கொள்கையை உருவாக்குவதில், அதன் கருத்துகளை தெரிவிக்குமாறு 'டிராய்' எனும் இந்திய தொலைதொடர்பு ஆணையத்திடம், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கடந்த ஜூலை 2023ல் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, இக்கொள்கையை உருவாக்குவதற்கு பரிந்துரைகளை டிராய் தற்போது வழங்கி உள்ளது.டிராயின் சில பரிந்துரைகள்: ஒளிபரப்பு துறையில், அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்க, அதற்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் ஒளிபரப்புக்கான ஒப்புதல்களை ஒற்றை சாளர முறையில், டிஜிட்டல் வாயிலாக வழங்க வேண்டும் டிவி, ரேடியோ மற்றும் ஓ.டி.டி., உள்ளிட்டவற்றுக்கு தற்போது உள்ள பார்வையாளர்கள் அளவிடும் முறையை மாற்ற வேண்டும் ஓ.டி.டி., தளங்கள், பார்வையாளர்கள் விபரங்களை பொதுவெளியில் வெளியிடுவதில்லை. இவ்விபரங்களை வெளியிடுவதற்கான கட்டமைப்பு ஒன்றை அமைச்சகம் உருவாக்க வேண்டும் கருத்து உருவாக்க மையங்களை அமைப்பதற்கு, சிறப்பு பொருளாதார மண்டலங்களை அரசு ஏற்படுத்த வேண்டும் கருத்து உருவாக்குபவர்களுக்கான அறிவுசார் சொத்துரிமையை வலுப்படுத்த வேண்டும் காப்புரிமை மீறல்களுக்கு எதிராக கடுமையான சட்டம், சிறப்பு நீதிமன்றங்கள் போன்ற வற்றை ஏற்படுத்த வேண்டும்.