உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மின் வாகனங்களுக்கு தர நிர்ணய கட்டுப்பாடு

மின் வாகனங்களுக்கு தர நிர்ணய கட்டுப்பாடு

புதுடில்லி : மின்சார வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உயர்த்த தரக்கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்திய தர நிர்ணய நிறுவனம்.மின்சார வாகனங்கள் அறிமுகமானதில் இருந்தே, பாதுகாப்பு குறைபாட்டால் பல அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. இதனால், மின்சார வாகன உபகரணங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, 'ஐ.எஸ்., -18590: 2024' மற்றும் 'ஐ.எஸ்., - 18606: 2024' ஆகிய இரு தரக்கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது, வலிமையான பவர்டிரைன் செயல்பாடு மற்றும் பேட்டரி பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது.இந்த இரு தரக்கட்டுப்பாடுகளும், மின்சார இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு லாரிகள் ஆகியவற்றிற்கு பொருந்தும். மூன்று சக்கர வாகனங்களுக்கு, பிரத்யேகமாக, 'ஐ.எஸ்., -18294: 2024' என்ற தரக்கட்டுப்பாடு அறிமுகம் ஆகிறது. இதனால் மூன்று சக்கர வாகனங்களின் கட்டமைப்பு முதல் இயக்கம் வரை பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கு இதுவரை மொத்தமாக 30 தரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ