உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியாவில் ஜெட் இன்ஜின் தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்

இந்தியாவில் ஜெட் இன்ஜின் தயாரிக்கும் ரோல்ஸ்ராய்ஸ்

கோவை:அடுத்த தலைமுறை போர் 'ஜெட்' விமானத்தை உருவாக்க, இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக 'ரோல்ஸ்ராய்ஸ்' கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.கோவை, கொடிசியா சார்பில், நடைபெற்றுவரும் சர்வதேச 'இன்டெக் 2024' இயந்திர கண்காட்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுவனத்தின் இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கான தலைவர் கிஷோர் ஜெயராமன் பேசியதாவது: ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம், ஒசூர், பெங்களூரு, புனே ஆகிய இடங்களில் உற்பத்தியை துவக்க ஆயத்தமாகி வருகிறது. 35,000 பேருக்கு வேலை வாய்ப்பு களை வழங்க உள்ளது. இந்தியாவில் கார் இன்ஜின்களை தயார் செய்வதோடு, விண்வெளி, விமானப்படை நிறுவனங்களுக்கும், விமானத்திற்கான இன்ஜின்களையும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அடுத்த தலைமுறைக்கான போர் ஜெட் விமானத்தை உருவாக்க, இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். நம் நாட்டிற்கான பாதுகாப்பை உருவாக்க, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி