| ADDED : மே 16, 2024 01:22 AM
புதுடில்லி:'சிப்லா' நிறுவனர்கள், தங்கள் நிறுவனத்தின் 2,750 கோடி ரூபாய் மதிப்புடைய 2.53 சதவீத பங்குகளை விற்றுஉள்ளனர்.இந்தியாவில் மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது சிப்லா நிறுவனம். இந்நிறுவனத்தின் நிறுவனர்கள், தற்போது நிறுவனத்தின் 2.53 சதவீத பங்குகளை விற்றுள்ளனர். 2,750 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த பரிவர்த்தனை, பணப்புழக்கத்தை உருவாக்குவதற்காகவும், தொண்டு நடவடிக்கைகளுக்கு நிதி அளிப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நிறுவனத்தில் நிறுவனர்கள் வசம் உள்ள பங்குகள் 31.67 சதவீதமாக உள்ளது. கடந்த மார்ச் 31, 2024 நிலவரப்படி, 33.47 சதவீத பங்குகள் நிறுவனர்கள் வசம் இருந்தது.