உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இறால் ஏற்றுமதி புகார்கள் ஆதாரமற்றவை

இறால் ஏற்றுமதி புகார்கள் ஆதாரமற்றவை

புதுடில்லி:இறால், மீன் உள்ளிட்ட கடல் உணவு பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தொழில்துறையில், வேலை செய்யும் சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு மோசமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள், வலுவான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதாக, மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டின் 548 கடல் உணவு அலகுகள், பல்வேறு அரசு அமைப்புகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படுகின்றன. இவை, உலகத்தரம் வாய்ந்த தரநிலைகளை பின்பற்றுகின்றன. இவை மீதான புகார்கள் முற்றிலும் தவறு; ஆதாரமற்றவை என அவர் மேலும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை