உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஹெலிகாப்டர் தயாரிப்பு டாடா - ஏர்பஸ் ஒப்பந்தம்

ஹெலிகாப்டர் தயாரிப்பு டாடா - ஏர்பஸ் ஒப்பந்தம்

புதுடில்லி:'ஏர்பஸ்' மற்றும் டாடா குழுமத்திற்கு இடையே, 'எச் 125' ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, அந்நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.இந்த ஆலை, ஹெலிகாப்டரின் முக்கிய பாகங்களை இணைத்தல், அதன் கட்டுப்பாடுகள், செயல் அமைப்புகள், ஹைட்ராலிக் சுற்றுகள், டைனமிக் கூறுகள், எரிபொருள் அமைப்பு மற்றும் இயந்திரம் உள்ளிட்டவற்றின் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும். மேலும், இங்கு ஹெலிகாப்டர்களின் சோதனை மற்றும் தரம் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ