| ADDED : மே 25, 2024 08:47 PM
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக் கான, 'காஸ்ட் இன்பிளேஷன் இண்டக்ஸ்' எனும் கிரய பணவீக்க குறியீட்டு புள்ளியை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. நிலம், கடன் பத்திரங்கள் மற்றும் நகைகள் போன்ற மூலதன சொத்துக்களின் விற்பனையின்போது, பணவீக்கத்தை கருத்தில் கொண்ட பின் கிடைக்கும் லாபத்தை அறிய, இக்குறியீடு உதவுகிறது. வரி செலுத்துவோர் பொதுவாக, கிரய பணவீக்க குறியீட்டு புள்ளிகள் அதிகமாக இருப்பதையே விரும்புகின்றனர். ஏனென்றால், இது பெரிய வரி தள்ளுபடிகளை கோர வழிவகுக்கிறது.இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான கிரய பணவீக்க குறியீடு, 363 புள்ளிகள் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது. இது, வரும் 2025 - 26ம் மதிப்பீட்டு ஆண்டுக்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கிரய பணவீக்க குறியீடு, கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், 331 புள்ளிகளாகவும்; கடந்த நிதியாண்டில், 348 புள்ளிகளாகவும் இருந்தது.