உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கோதுமை கையிருப்பு வரம்பு: அரசு அறிவிப்பு

கோதுமை கையிருப்பு வரம்பு: அரசு அறிவிப்பு

புதுடில்லி : கோதுமையின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும், அதற்கான இருப்பு வரம்புகளை மத்திய அரசு விதித்துள்ளதாக, மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: உணவு தானியங்கள் பதுக்கலை தடுக்கவும், விலை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், சில்லரை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், பெரிய சில்லரை விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு, கோதுமைக்கான இருப்பு வரம்புகளை மத்திய அரசு விதித்துள்ளது.மொத்த விற்பனையாளர்களுக்கு, 3,000 டன் இருப்பு வரம்பாக இருக்கும். பெரிய சில்லரை விற்பனையாளர்களுக்கு, ஒரு விற்பனை நிலையத்திற்கு 10 டன்னாகவும், ஒட்டுமொத்தமாக 3,000 டன்னாகவும் இருக்கும். சில்லரை விற்பனையாளர்களுக்கு 10 டன்னாகவும் இருப்பு வரம்பு இருக்கும்.இந்த வரம்புகளின் அடிப்படையில், மேற்கண்ட அனைத்து விற்பனையாளர்களும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கோதுமை இருப்புகளை வெளியிடுவர். தற்போது, கோதுமை ஏற்றுமதிக்கான தடை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சர்க்கரை ஏற்றுமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை