உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 2000 ரூபாய் நோட்டுகள் 97.38 சதவீதம் திரும்பியது

2000 ரூபாய் நோட்டுகள் 97.38 சதவீதம் திரும்பியது

2000 ரூபாய் நோட்டுகள் 97.38 சதவீதம் திரும்பியது

கிட்டத்தட்ட 97.38 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கி அமைப்புக்குள் திரும்பி வந்துவிட்டதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி நிலவரப்படி, இன்னும் 9,330 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள், பொதுமக்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 19ம் தேதி, புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் 7ம் தேதி வரை அனைத்து வங்கி கிளைகளிலும் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதன் பின் நாடு முழுதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

25,000 டன் வெங்காயம் மத்திய அரசு கொள்முதல்

கடந்த 2023ம் ஆண்டு காரீப் பருவத்தில் விளைந்த வெங்காயத்தில், கூடுதல் இருப்பாக 25,000 டன்களை அரசு கொள்முதல் செய்துள்ளதாக, நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார். உள்நாட்டு சந்தையில் அதிகளவு வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும்; அதன் விலையை கட்டுக்குள் வைக்கவும், அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்வதாக அவர் கூறினார். கடந்த நிதியாண்டில் மொத்த கையிருப்பு மூன்று லட்சம் டன்களாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் கையிருப்பு இலக்கை ஏழு லட்சம் டன்களாக அரசு நிர்ணயித்துள்ளது. வரும் மார்ச் 31ம் தேதி வரை, வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு தேதி கட்டாயம்: புதிய நடைமுறை அமல்

புத்தாண்டு தினத்திலிருந்து 'பேக்கிங்' செய்யப்பட்ட பொருட்களில், தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் விற்பனை விலை அச்சிடப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார். முன்பிருந்த நடைமுறையில் நிறுவனங்கள், தயாரிக்கப்பட்ட தேதி, இறக்குமதி செய்யப்பட்ட தேதி அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி இவற்றில் ஏதேனும் ஒன்றை அவர்களின் விருப்பத்திற்கேற்ப அச்சிடலாம் என வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு, தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் பொருளின் விற்பனை விலை அச்சடிக்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை