சர்வதேச அரங்கில் இடம்பெற்ற 4 நாடுகள், 50 நிறுவனங்கள்
சர்வதேச அரங்கம்
கட்டுமான இயந்திரங்கள் கண்காட்சியில், உலக நாடுகள் பங்கேற்க சர்வதேச அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில், ஜெர்மனி, கொரியா, இத்தாலி, சீனா ஆகிய நான்கு நாடுகளின் முக்கிய நிறுவனங்கள், தங்கள் அரங்கத்தை அமைத்து இருந்தன.ஜெர்மனிஅரங்கம்
ஜெர்மனியை சேர்ந்த 26 நிறுவனங்கள், தங்கள் ஸ்டால்களை அமைத்து இருந்தன. இதில், இயந்திரங்களுக்கு தேவையான ரேடியேட்டர்கள், ஹைட்ராலிக் பில்டர்கள், கான்கிரீட் உற்பத்தி, டிரான்ஸ்மிஷன், சென்சார்கள் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் இடம்பெற்று இருந்தன.கொரியன் அரங்கம்
இங்கு 12 கொரிய நிறுவனங்களின் ஸ்டால்கள் உள்ளன. இதில், ஹைட்ராலிக் அமைப்புகள், இயந்திர உதிரிபாகங்கள், சி.என்.சி., இயந்திரங்கள், லுாப்ரிகன்ட்ஸ், பிளாஸ்டிக் பொருட்கள், மோட்டார், இயந்திரம் மற்றும் சாலை பராமரிப்பு உபகரணங்கள் தொடர்பான நிறுவனங்கள் இருந்தன.
இத்தாலி அரங்கம்
இங்கு 10 இத்தாலி நிறுவனங்கள் தங்கள் ஸ்டால்களை அமைத்து இருந்தன. பம்புகள், ஒயர்கள், டீசல் மற்றும் ஹைப்ரிட் பவர் அமைப்பு கள், ஹோஸ்கள் மற்றும் ட்யூபுகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இருந்தன.சீன அரங்கம்சீன நிறுவனங்கள், ஐந்து ஸ்டால்களை அமைத்திருந்தன. ஹைட்ராலிக் அமைப்புகள் மற்றும் ஹோஸ்கள், இயந்திர லைட்டுகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.