உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கடன் அட்டையை சார்ந்திருக்கும் 93% குறைந்த சம்பளதாரர்கள்

கடன் அட்டையை சார்ந்திருக்கும் 93% குறைந்த சம்பளதாரர்கள்

இந்தியாவில் மாதம் 50,000 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் பெறுவோரில், 93 சதவீதம் பேர் கிரெடிட் கார்டுகளை நம்பி இருப்பதாக திங்க்360.ஏ.ஐ., என்ற நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 12 மாதங்கள், சம்பளதாரர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் 20,000 பேரின் நிதி சார்ந்த நடத்தை ஆய்வு செய்யப்பட்டது. அதில் 85 சதவீதம் சுயதொழில் செய்வோர் கிரெடிட் கார்டுகளை சார்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதே போன்று, தற்போது வாங்கி பின்னர் பணம் செலுத்தும் பி.என்.பி.எல்.,வசதியை 18 சதவீத சுயதொழில் பிரிவினரும், 15 சதவீத சம்பளதாரர்களும் பயன்படுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி