மியூச்சுவல் பண்டு வர்த்தகம் யுனிபைக்கு அனுமதி
சென்னை:'யுனிபை அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனம், மியூச்சுவல் பண்டு வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபட, பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான செபி அனுமதி வழங்கியுள்ளது.நிதி முதலீடு சந்தையில் ஈடுபடும் நிறுவனமான 'யுனிபை கேப்பிடல்', மியூச்சுவல் பண்டு செயல்பாடுகளில் ஈடுபட, செபியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துஇருந்தது. யுனிபை அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் வாயிலாக, விண்ணப்பித்த நிலையில், தற்போது அனுமதியை பெற்று உள்ளது.