உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிரேசில் பருப்பு இறக்குமதி 5 மடங்கு உயர்வு

பிரேசில் பருப்பு இறக்குமதி 5 மடங்கு உயர்வு

புதுடில்லி:இந்தியாவின் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு இறக்குமதிக்கு, பிரேசில் முக்கிய ஆதாரமாக மாற வாய்ப்புள்ளதாக, மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அமைச்சகம் மேலும் தெரிவித்து உள்ளதாவது: பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உளுத்தம் பருப்பின் அளவு கடந்த 2023ல் 4,102 டன்னில் இருந்து, நடப்பு ஆண்டின் அக்டோபர் இறுதி வரை 22,000 டன்னாக அதிகரித்துள்ளது. இதையடுத்து துவரை மற்றும் கருப்பு உளுந்துக்கான முக்கிய இறக்குமதி ஆதாரமாக, மாறும் திறனை பிரேசில் பெற்று உள்ளது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.2023ல் பிரேசிலில் இருந்து இறக்குமதியான உளுத்தம் பருப்பு 4,102 டன். நடப்பு ஆண்டின் அக்டோபர் இறுதியில் இது 22,000 டன்னாக அதிகரித்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
நவ 09, 2024 21:28

விவசாயம் செய்வோரை எல்லாம் ப்ரோக்கர் அரசியல்வாதிகள் மோசம் செய்து விட்டனர் , இன்னமும் எதையெல்லாம் இறக்குமதி செய்யணுமோ


JAINUTHEEN M.
நவ 09, 2024 19:04

இடம் இல்லை. எல்லாம் பிளாட் போட்டு வித்தாச்சு. ஹா... ஹா...ஹா...


Dharmavaan
நவ 09, 2024 08:35

இதை இங்கு ஏன் பயிர செய்ய முடியவில்லை


நிக்கோல்தாம்சன்
நவ 10, 2024 05:42

உழைப்பவர்கள் கம்மியாகி விட்டனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை