உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சைபர் தாக்குதல்கள் பிரச் னை ஆதாரை மேம்படுத்த குழு அமைப்பு

சைபர் தாக்குதல்கள் பிரச் னை ஆதாரை மேம்படுத்த குழு அமைப்பு

புதுடில்லி:நம்நாட்டின் அனைவரது சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு ஆதாரமாக விளங்கும் ஆதாரின் பாதுகாப்பை எல்லா நிலைகளிலும் மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உயர்நிலை வல்லுனர் குழுவை தனித்துவ அடையாள ஆணையமான யு.ஐ.டி.எ.ஐ., அமைத்து உள்ளது. சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் தற்காலத்தில், ஆதார் தகவல்கள் திருடப்பட்டு, வங்கி இருப்பு முதல் தனிப்பட்ட தகவல்கள் வரை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவிடும் நிலை உள்ளதாக அச்சம் உள்ளது. இதற்கு தீர்வளிக்கும் வகையில், எதிர்கால தொழில்நுட்பத்துக்கேற்ப ஆதாரை மேம்படுத்துவதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஒரு உயர்நிலை வல்லுனர் குழுவை அமைத்திருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளியன்று ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இதன்படி, வல்லுனர் குழுவுக்கு தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவரான நீல்காந்த் மிஸ்ரா தலைவராக இருப்பார். இக்குழு, எதிர்காலத்தின் தேவைக்கு ஏற்ப ஆதார் தொழில்நுட்பத்தை மென்மேலும் பாதுகாப்பானதாக மாற்றவும், ஆதாரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லவும், இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். மக்களை மையப்படுத்திய டிஜிட்டல் அடையாள ஆவணமாக, ஆதாரை 2032ம் ஆண்டுக்குள் உறுதிப்படுத்த இந்த குழு வழிமுறைகளை உருவாக்கும். மின்னணு தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட அம்சங்களை நிறைவு செய்யும் வகையில் இது இருக்கும். பிரைவஸி மற்றும் சைபர் செக்யூரிட்டியில் சர்வதேச தரத்தை இந்த குழு உறுதிப்படுத்தும். குழுவில் ஆணையத்தின் தலைமை செயல் அலுவலர் புவனேஷ் குமார், அம்ரிதா பல்கலைக்கழக பேராசிரியர் பிரபாகரன் பூரணச்சந்திரன் உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை