உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பாதுகாப்பு, விண்வெளி தயாரிப்புகள் ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஒப்பந்தம்

பாதுகாப்பு, விண்வெளி தயாரிப்புகள் ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஒப்பந்தம்

புதுடில்லி:ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுவதில் பயன்படுத்தப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்காக, 'ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ்' நிறுவனமும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மையமும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதுகுறித்து, ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பிற துறைகளில், உபகரணங்களின் மேம்பாட்டுக்கு தேவையான அத்தியாவசிய கூறுகளின் உற்பத்தியை இந்த ஒத்துழைப்பு மேம்படுத்தும். மேலும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறை உற்பத்தியை வலுப்படுத்தும் முயற்சியில், ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனப் பிரிவுகளுக்கான மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளை தயாரிப்பதற்காக, இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தயாரிக்கப்படும் தயாரிப்புகள் மோட்டார் உறைகள், ஏவுகணை இறக்கைகள், ஏவுகணை கட்டமைப்புகள் மற்றும் ராக்கெட் மோட்டார் பூஸ்டர்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும். இவ்வாறு தெரிவித்து உள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்த ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிர்வாக இயக்குனர் அபியுதாய் ஜிண்டால், “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளுக்கு உயர்தர தயாரிப்புகளை அதிக செயல்திறனுடன் வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்