உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 2வது வாரமாக சரிவுடன் முடிவு

2வது வாரமாக சரிவுடன் முடிவு

 பங்குச் சந்தை குறியீடுகள் தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவுடன் முடிவடைந்தன  வங்கி துறை சார்ந்த பங்குகள் மற்றும் 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவன பங்குகள் வீழ்ச்சி, சந்தையின் இறக்கத்துக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது சீனாவின் நிதியமைச்சகம், சனிக்கிழமை அன்று பத்திரிகை யாளர்களை சந்தித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக வந்த செய்தி, உலக முதலீட்டாளர்களை ஜாக்கிரதை உணர்வுடன்சந்தையை அணுக வைத்தது நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீடு உள்ளிட்ட சில முக்கிய தரவுகள் வெளியாக இருப்பதை முன்னிட்டு, உள்நாட்டு வர்த்தகர்களும் கவனமுடன் சந்தையை அணுகினர்  அடுத்து வரும் நாட்களில் முக்கியமான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவர இருப்பதால், அதை ஒட்டியே சந்தையின் போக்கு அமையும் என்கின்றனர்நிபுணர்கள்.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 4,163 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.77 சதவீதம் சரிந்து, 78.79 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா குறைந்து, 84.09 ரூபாயாக இதுவரை இல்லாத அளவில் சரிவை கண்டது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை டிரென்ட் ஹிண்டால்கோ எச்.சி.எல்., டெக் டெக்மஹிந்திரா ஓ.என்.ஜி.சி.,அதிக இறக்கம் கண்டவை டி.சி.எஸ்., மஹிந்திரா & மஹிந்திரா ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் சிப்லா அதானி என்டர்பிரைசஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை