உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து பயோ எரிவாயு தயாரிக்க அரசு திட்டம்

சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து பயோ எரிவாயு தயாரிக்க அரசு திட்டம்

சென்னை : தமிழகத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் வெளியேறும் கரும்புச்சக்கை கழிவில் இருந்து, 'பயோ' எனப்படும் உயிரி எரிவாயுவை தயாரிக்க, தமிழக அரசின் உயிரி எரிபொருள் வாரியம் திட்டமிட்டுள்ளது.நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்கவும், பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளை பயன்படுத்துமாறு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.காய்கறி, உணவு தானிய கழிவுகள், வன எச்சம் போன்றவை, உயிரி எரிபொருளாக மாற்ற பயன்படுகின்றன. அவற்றை பயன்படுத்தி, உயிரி எரிபொருளை தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான பணிகளை முன்னெடுப்பது, வழிமுறை கள் வகுப்பது போன்றவற்றிற்காக, வேளாண், ஊரக வளர்ச்சி, எண்ணெய் நிறுவனங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியம், 'டெடா' எனப்படும் எரிசக்தி மேம்பாட்டு முகமை உட்பட, 17 துறைகளை ஒருங்கிணைத்து, உயிரி எரிபொருள் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, கரும்புச்சக்கை கழிவில் இருந்து, தலா ஒரு ஆலையில் தினமும், 10 டன்னுக்கு அதிகமாக உயிரி எரிவாயு தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.தமிழக அரசுக்கு, இரண்டு பொது மற்றும், 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளன. எனவே, அந்த ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்து, உயிரி எரிவாயு தயாரிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

சர்க்கரை ஆலைகளில் கரும்பில் இருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. கரும்பு சக்கையை பயன்படுத்தி, மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் சக்கை கழிவை பயன்படுத்துவதில்லை. வீணாக வெளியேற்றப்படுகிறது. அதில், உயிரி எரிவாயு தயாரிக்க முடியும் என்பதை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த தயாரிக்கும் ஆலை அமைக்க நிதி உதவியும் செய்கிறது. எனவே, தமிழகத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து, உயிரி எரிவாயு தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


துளிகள்

2 hour(s) ago  



எண்கள்

2 hour(s) ago  


முக்கிய வீடியோ