உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உலக வர்த்தக மன்ற பட்டியலில் மெட்ராஸ் ஐ.ஐ.டி., ஸ்டார்ட்அப்கள்

உலக வர்த்தக மன்ற பட்டியலில் மெட்ராஸ் ஐ.ஐ.டி., ஸ்டார்ட்அப்கள்

உலக வர்த்தக மன்றத்தின் 2025ம் ஆண்டுக்கான தொழில்நுட்ப முன்னோடிகள் அறிக்கையில், 10 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மூன்று நிறுவனங்கள் மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில் துவங்கப்பட்டவை. 28 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் இயங்கி வரும் 100 ஆரம்பகட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்டு, இந்த தொழில்நுட்ப முன்னோடிகள் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் நம் நாட்டைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அக்னிகுல் காஸ்மோஸ், கேலக்ஸ்ஐ, இ - ப்ளேன் ஆகிய மூன்று ஸ்டார்ட் அப்களும் மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில் துவங்கப்பட்ட விண்வெளி துறை சார்ந்த நிறுவனங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி