உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்க வரி விதிப்பையும் தாண்டி வளர்ச்சி கண்ட இந்திய பொருளாதாரம்

அமெரிக்க வரி விதிப்பையும் தாண்டி வளர்ச்சி கண்ட இந்திய பொருளாதாரம்

புதுடில்லி: அமெரிக்கா வரி விதிப்பையும் தாண்டி, இந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் (ஜூலை - செப்டம்பர்) இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துள்ளது மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.2025 - 26ம் நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது. முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் 2வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதம் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆறு காலாண்டுகளில், தற்போது தான் இந்திய பொருளாதாரம் அதிகபட்ச வளர்ச்சி கண்டுள்ளது. உற்பத்தித்துறை(9.1%), கட்டுமானத்துறை (7.2 %), தொழில்துறை (8.1 %) , சேவைத்துறை(9.2 %), நிதி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் (10.2 %) வளர்ச்சி பெற்றுள்ளன. தனியார் துறை நுகர்வும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம், பரஸ்பர வரியாக 25 சதவீதம் என 50 சதவீத வரியை அதிபர் டிரம்ப் விதித்து இருந்தார். அதையும் தாண்டி இந்த வளர்ச்சியை இந்தியா எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மகிழ்ச்சி

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:2025 - 26ம் நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்திய ஜிடிபி 8.2 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது மிகவும் ஊக்கமளிக்கிறது. இது வளர்ச்சிக்கு உகந்த நமது கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை எதிரொலிக்கிறது. இது நமது மக்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளையும் காட்டுகிறது. நமது அரசு, தொடர்ந்து சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதுடன், ஒவ்வொரு குடிமகனும் எளிதான வாழ்க்கை வாழ்வதற்கான நடவடிக்கைளை பலப்படுத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ