உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தமிழகத்தில் தொழிற்பூங்கா சமுத்ரா இன்ப்ரா., திட்டம்

தமிழகத்தில் தொழிற்பூங்கா சமுத்ரா இன்ப்ரா., திட்டம்

சென்னை:சமுத்ரா இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனம், தமிழகத்தில் தொழிற்பூங்காக்கள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. நிலம் சேகரிப்பு வணிகத்தில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், 85,000 கோடி ரூபாய் முதலீட்டில் 10 மாநிலங்களில் தொழில் மற்றும் வணிக பூங்காக்களை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் தொழிற்பூங்காக்கள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலைப் பகுதி மற்றும் சென்னை துறைமுகப் பகுதிகளில் இந்த பூங்காக்கள் அமைக்கப்பட இருப்பதாகவும்; கூடுதலாக இரண்டாம் கட்ட நகரங்களில் வணிக பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பூங்காக்கள் போக்குவரத்து இணைப்பு, வலுவான உள்கட்டமைப்புடன் அமைக்கப்படும் என்றும், வாகனம், ஜவுளி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை