மேலும் செய்திகள்
கபே விதிமுறைகளுக்கு மாருதி சுசூகி தலைவர் எதிர்ப்பு
9 minutes ago
பாமாயில் இறக்குமதி 47 சதவீதமாக குறைந்தது
19 minutes ago
111 நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி உயர்வு
20 minutes ago
அமராவதி, டி.சி.எஸ்., காக்னிஸன்ட் நிறுவனங்களை தொடர்ந்து, அக்செஞ்சர், இன்போசிஸ் நிறுவனங்களுக்கு 99 பைசா விலையில் ஆந்திர அரசு நிலம் வழங்குகிறது. இந்த நான்கு நிறுவனங்களும் மொத்தமாக, கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாயை ஆந்திராவில் முதலீடு செய்ய இருக்கின்றன. இரண்டாம் நிலை நகரங்களில் ஐ.டி., வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக, லிப்ட் கொள்கை 4.0ஐ ஆந்திர அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அக்செஞ்சர், இன்போசிஸ் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே இத்திட்டத்தின்கீழ், டி.சி.எஸ்., காக்னிஸன்ட் நிறுவனங்களுக்கு விரிவாக்க நடவடிக்கைகளுக்காக சலுகை விலையில் நிலம் வழங்கப்பட்டது. டி.சி.எஸ்., நிறுவனம், அடிபட்லாவில் புதிய அலுவலகத்தைத் திறக்க இருக்கிறது. அதேபோல, காக்னிஸன்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்துக்கு விசாகப்பட்டினத்தில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. தைவான் முதலீடு இதனிடையே, ஆந்திராவில் 18,400 கோடி ரூபாய் முதலீடு செய்வது தொடர்பாக தைவானைச் சேர்ந்த இரு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
9 minutes ago
19 minutes ago
20 minutes ago