உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பண பரிமாற்ற சேவை இந்தியா - நேபாளம் ஒப்பந்தம்

பண பரிமாற்ற சேவை இந்தியா - நேபாளம் ஒப்பந்தம்

மும்பை:இந்தியாவின் யு.பி.ஐ., மற்றும் நேபாளத்தின் என்.பி.ஐ., பண பரிமாற்ற சேவைகளை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில், ரிசர்வ் வங்கியும், நேபாளின் மத்திய வங்கியும் கையெழுத்திட்டுள்ளன. இந்த இணைப்பின் முறையான துவக்கம் பின்னர் நடைபெறும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.“இந்த ஒருங்கிணைப்பு, இந்தியாவிற்கும் - நேபாளத்திற்கும் இடையே எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இரு இடைமுகங்களின் பயனர்களும், உடனடி மற்றும் குறைந்த செலவில் நிதி பரிமாற்றங்களைச் செய்ய இது உதவுகிறது. இது, இரு நாடுகளுக்கு இடையே நிதி இணைப்பை மேலும் ஆழப்படுத்துவதோடு, ஏற்கனவே நீடித்து வரும் வரலாற்று, கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும்,” என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை