உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இனி லாக் இன் செய்யாமல் எளிதாக வருமான வரி செலுத்தலாம்

இனி லாக் இன் செய்யாமல் எளிதாக வருமான வரி செலுத்தலாம்

வருமான வரி செலுத்தும் நடைமுறையை எளிதாக்கும் வகையில், வருமான வரித்துறை, அதன் இணைய பக்கத்தில் 'இ - பே டாக்ஸ்' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வருமான வரி இணையதளத்தில் 'லாக் இன்' செய்யாமலேயே, வரி செலுத்த முடியும். பயனர்பெயர், கடவுச்சொல் ஆகியவையும் தேவையில்லை. முன்கூட்டிய வரி, சுய மதிப்பீட்டு வரி, டி.டி.எஸ்., டி.சி.எஸ்., டிபாசிட்கள் மற்றும் அபராதம், வட்டி, தாமதக் கட்டணம் போன்ற பல்வேறு வரி செலுத்தும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் இ - பே டாக்ஸ் வசதி வடிவமைக்கப்பட்டுஉள்ளது.

எளிதான செயல்முறை:

1. வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும் 2. முகப்பு பக்கத்தின் இடது மேல் மூலையில் உள்ள 'இ - பே டாக்ஸ்' விருப்பத்தை தேர்வு செய்யவும்3. வரி செலுத்துபவர்கள் தங்கள் மொபைல் எண், பான் எண் ஆகியவற்றை உள்ளிட்டு, ஓ.டி.பி. பெற்று அதை உள்ளிட்டு சரிபார்க்க வேண்டும்.4. வருமான வரி, முன்கூட்டிய வரி போன்ற பொருத்தமான வரி வகையைத் தேர்ந்தெடுத்து, கூடுதல் கட்டணம், வட்டி அல்லது அபராதங்கள் போன்ற தொடர்புடைய கட்டண விவரங்களை உள்ளிடவும்.5. தகவல்களை மதிப்பாய்வு செய்த பிறகு, பரிவர்த்தனையை முடிக்க 'பே நவ்' என்பதை க்ளிக் செய்யவும்.6. பரிவர்த்தனை உறுதியானது குறித்து உடனடியாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.7. கட்டண ரசீதை பதிவிறக்கம் செய்வதற்கான வசதியும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை