உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ஐரோப்பிய நாடுகளுக்கு இறால் ஏற்றுமதி செய்ய திட்டம்

 ஐரோப்பிய நாடுகளுக்கு இறால் ஏற்றுமதி செய்ய திட்டம்

ராமநாதபுரம்: இறால் இறக்குமதிக்கு அமெரிக்கா 58.60 சதவீதம் வரை வரி விதிப்பதால், ஐரோப்பிய நாடுகளுக்கு இறால் ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக ராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்போர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ரெங்கநாதன் கூறியதாவது: தமிழகத்தில் இறால் உற்பத்தி சமீப காலமாக நலிவடைந்து வருகிறது. மின்கட்டணம், பராமரிப்பு செலவுகள் அதிகரித்த நிலையில், இறால் கொள்முதல் விலை குறையவே செய்கிறது. லாபமில்லை என்றாலும் பண்ணையை நடத்த வேண்டிய சூழல் உள்ளது. ராமநாதபுரத்தில் 160 இறால் பண்ணைகள் இருந்த நிலையில் தற்போது 50 தான் உள்ளன. அதே போல், ஆறு மாதத்திற்கு ஒரு முறை 3,000 டன் இறால் உற்பத்தி நடைபெற்றது. தற்போது பாதியாக குறைந்து 1,500 டன் தான் நடக்கிறது. இந்நிலையில் தான், இறால் இறக்குமதிக்கு அமெரிக்கா 58.60 சதவீதம் வரி விதிக்கிறது. இதற்கு மாற்றாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். புதிதாக ஒரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் போது அந்த நாட்டிற்கான விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் இறால் இரு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு தான் ஏற்றுமதியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை