மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
10 minutes ago
50 நாடுகளுடன் வர்த்தக பேச்சு
15 minutes ago
20% வளர்ச்சி காணும் இந்திய சுற்றுலா துறை
18 minutes ago
புதுடில்லி: கடனில் ஸ்மார்ட்போன் வாங்கி விட்டு, மாத தவணை செலுத்த தவறியவர்களின் போனை முடக்குவதற்கு, ஆர்.பி.ஐ., விதித்த தடையால், கடனை கட்ட தவறுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் 20 சதவீதம் அதிகரித்து வருவதாக வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இந்தியாவில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நுகர்வோர் பொருட்கள் சார்ந்த கடன் பிரிவில், ஸ்மார்ட்போன்களின் பங்கு 50 சதவீதமாக உள்ளது. ஸ்மார்ட்போன் கடன்கள் பாதுகாப்பற்றவை என்றாலும், வாங்கியவர் தவணை கட்ட தவறினால், அதன் இயக்கத்தை முடக்கி வைக்கும் நடைமுறையை வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பின்பற்றின. இது குறித்து கவலை தெரிவித்துள்ள ஆர்.பி.ஐ., கடந்தாண்டு ஸ்மார்ட்போன் கடனுக்கான இ.எம்.ஐ., செலுத்தாத வாடிக்கையாளரின் போனை முடக்குவதற்கு தடை விதித்தது. இந்நிலையில், வங்கி அல்லாத நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாவது: ஆர்.பி.ஐ., உத்தரவால், ஸ்மார்ட்போன் கடனை கட்ட தவறுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர் இ.எம்.ஐ., செலுத்த தவறும்பட்சத்தில், 95 சதவீதம் கடன்கள் தொலைபேசி வாயிலாக தீர்க்கப்படுகின்றன. எனினும் 90 நாட்களுக்கு மேல் கடனை திருப்பி செலுத்தாத நிலையில் மட்டுமே, கடன் வசூலிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, முடக்கப்பட்டு வந்தன. இவ்வாறு தெரிவித்து உள்ளன.
10 minutes ago
15 minutes ago
18 minutes ago