| ADDED : நவ 25, 2025 01:06 AM
புதுடில்லி: நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கான முக்கிய சந்தையாக விளங்கும் அமெரிக்கா தவிர்த்து, பிற நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 16.18 சதவீதம் அதிகரித்து 42,856 கோடி ரூபாயாக இருந்ததாக அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரிவிதிப்பு காரணமாக, அந்நாட்டுக்கான ஏற்றுமதி சரிந்துள்ளது. அதே நேரத்தில், சீனா, வியட்நாம், பெல்ஜியம், ஜப்பான், ரஷ்யா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்திய கடல் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் நியாயமான விலை காரணமாக, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகள் நம் நாட்டு வர்த்தகர்களின் பக்கம் திரும்பியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்த ஏற்றுமதியில் 27,280 கோடி ரூபாயுடன் இறால் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கடந்தாண்டின் இதே காலத்தில் 23,232 கோடி ரூபாயாக இருந்தது. அதிகரித்த ஏற்றுமதி சீனா வியட்நாம் பெல்ஜியம் ஜப்பான் ரஷ்யா கனடா பிரிட்டன்