மேலும் செய்திகள்
சொத்து விபரங்களை வெளியிட செபி உயர் அதிகாரிகள் தயக்கம்
20 hour(s) ago
நவம்பரில் கார் விற்பனை 19 சதவீதம் அதிகரிப்பு
20 hour(s) ago
இந்தியா தென்கிழக்கு ஆசியாவின் பாலம் மியான்மர்
20 hour(s) ago
சென்னை:பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கைளை முறைப்படுத்தும் திட்டத்தில், எஸ்.சி., - எஸ்.டி., உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கூடுதல் மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்குமாறு மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்து உள்ளது. மத்திய அரசு, உணவு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்கள் பயன்பெற, உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துகிறது.தமிழகத்தில், அத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக, சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் தொழில் வணிக ஆணையரகம் உள்ளது.உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் தனிநபர், மகளிர் குழு தொழில் துவங்க, இயந்திரங்கள் மதிப்பில், 35 சதவீதம் அல்லது, 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் உற்பத்தி நிறுவனங்களுக்கு, 3 கோடி ரூபாய் வரையிலான பொது கட்டமைப்பு வசதி களை உருவாக்கும் திட்டங்களுக்கு, 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மொத்த மானியத்தில், 60 சதவீதம் மத்திய அரசும்; 40 சதவீதம் தமிழக அரசும் வழங்குகின்றன. தொழில்முனைவோர், 10 சதவீதம் முன்பணம் செலுத்த வேண்டும். மீதி, 60 சதவீதம் வங்கிகளில் கடன் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரதமர் உணவு பதப்படுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அத்திட்டத்தில், இதுவரை கடன் பெற்றுள்ள மொத்த பயனாளிகளில், 68 சதவீதம் பெண்கள். தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களில், எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் உடைய சிறப்பு பிரிவினருக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.அதேபோல், பிரதமர் உணவு பதப்படுத்தும் திட்டத்திலும், சிறப்பு பிரிவினருக்கு கூடுதலாக, 5 சதவீதம் மானியம்; 10 சதவீத முன்பணத்தை, 5 சதவீதமாகக் குறைப்பது; கடனுக்கு குறைந்த வட்டி ஆகிய சலுகைகள் வழங்கு மாறு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும், சிறப்பு பிரிவினருக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் கடன் பெற்று தொழில் துவங்க விரும்புவோர், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago