உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொலை தொடர்பு உரிம கட்டண வருவாய் ரூ.5,326 கோடி

தொலை தொடர்பு உரிம கட்டண வருவாய் ரூ.5,326 கோடி

புதுடில்லி : தொலைத்தொடர்பு உரிம கட்டண வசூல், கடந்த 2023 செப்டம்பர் காலாண்டில் 8.23 சதவீதம் அதிகரித்து, 5,326 கோடி ரூபாயாக உள்ளது என 'டிராய்' தெரிவித்துள்ளது. கடந்த 2023 செப்டம்பர் காலாண்டில், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கு வோரிடமிருந்து, அரசுக்கான உரிமக் கட்டண வசூல் 8.23 சதவீதம் அதிகரித்து, 5,326 கோடி ரூபாயாக இருந்தது. அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் 40 சதவீதம் குறைந்து, 836 கோடி ரூபாயாக உள்ளது. உரிமக் கட்டணம், கடந்த 2023 காலாண்டு முடிந்த ஜூன் மாதத்தில் 5,246 கோடி ரூபாயில் இருந்து, 2023 செப்டம்பர் காலாண்டில் 5,326 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. உரிமக் கட்டணங்களின் காலாண்டு மற்றும் கடந்த ஆண்டுடனான வளர்ச்சி விகிதம் முறையே, 1.53 மற்றும் 8.23 சதவீதமாக உள்ளது.மொபைல் ஆபரேட்டர்கள், உரிமக் கட்டணமாக 4,350.67 கோடி ரூபாயும், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமாக 831.49 கோடி ரூபாயும் செலுத்திஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்