உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நாட்டின் கோதுமை உற்பத்தி 1,140 லட்சம் டன்னை எட்டும்

நாட்டின் கோதுமை உற்பத்தி 1,140 லட்சம் டன்னை எட்டும்

புதுடில்லி: பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு மற்றும் வானிலை இயல்பானதாக இருக்கும்பட்சத்தில், நடப்பு பயிர் ஆண்டில், கோதுமை உற்பத்தி 1,140 லட்சம் டன்களை எட்டும் என எதிர்பார்ப்பதாக, இந்திய உணவு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அசோக் கே மீனா தெரிவித்துள்ளார். கடந்த 2022-23 பயிர் ஆண்டில், கோதுமை உற்பத்தி 1,105.50 லட்சம் டன்னாக இருந்தது. நடப்பாண்டில் தட்பவெப்பநிலை சரியாக இருந்தால் 1,140 லட்சம் டன் கோதுமை உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட கோதுமை பயிரிடப்படும் பரப்பளவு அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் ஒரு சதவீத பற்றாக்குறை உள்ளது. ஆனால், அது ஜனவரி முதல் வாரத்தில் ஈடு செய்யப்படும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ