உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

ப்ளக்ஸ்மார்ட் நிறுவனத்தின் சார்ஜிங் கட்டமைப்புக்கு அங்கீகாரம்

சென்னையைச் சேர்ந்த ஸ்மார்ட் மின்சார வாகன சார்ஜர் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'ப்ளக்ஸ்மார்ட்', முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சார்ஜிங் கட்டமைப்புக்காக, இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஆதரவில் துவங்கிய இந்த நிறுவனம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பி.எல்.சி., எனும் மின்சக்தி தொடர்பு மாட்யூல்களைக் கொண்டு, புதிய மின்சார வாகன சார்ஜரை அறிமுகப்படுத்திஉள்ளது. முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த சார்ஜிங் கட்டமைப்புக்கு, இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரத்தை பெற்ற முதல் இந்திய நிறுவனமாகியுள்ளதுப்ளக்ஸ்டார்ட்.இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள 240 கிலோவாட் நேரடி அதிவேக மின்சார சார்ஜர்கள், அதி நவீன கார்கள், வணிக வாகனங்களுக்கு ஏற்றவை.

எம்.எஸ்.எம்.இ., நிலுவை தொகை ரூ.50,000 கோடியாக அதிகரிப்பு

பெரு நிறுவனங்கள், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையின் மதிப்பு, கடந்த மார்ச் மாதத்துடன் 50,000 கோடி ரூபாயை கடந்துள்ளது. சிறு,குறு நிறுவனங்களின் நலனைக் காக்கும் நோக்கில், இந்நிறுவனங்களிடமிருந்து சரக்கு மற்றும் சேவைகளை பெரும் நிறுவனங்கள், 45 நாட்களுக்குள்ளாக உரிய தொகையை செலுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், ஆண்டுதோறும் இந்த நிலுவைத் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்தாண்டு மார்ச்சில் 41,900 கோடி ரூபாயாக இருந்த நிலுவை, நடப்பாண்டு மார்ச்சில் 20 சதவீதம் உயர்ந்து, 50,359 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த சிக்கலுக்கு சுமூக தீர்வு காண்பதற்காக, மத்திய அரசால் துவங்கப்பட்ட சமாதான் தளத்தில் இதுவரை 2.31 லட்சம் புகார்கள் பதியப்பட்டுள்ளன. இதில் 46,892 புகார்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது. நிலுவைகள் அதிகரிப்பதால் குறு, சிறு நிறுவனங்களின் அன்றாட செயல்பாட்டுக்கு தேவையான மூலதனத்துக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை