| ADDED : டிச 27, 2025 01:07 AM
செயற்கை வைர நகைகள் விற்பனையில் டைட்டன் டா டா குழுமத்தை சேர்ந்த டைட்டன் நிறுவனம், மும்பையில் வரும் 29ம் தேதி 'பீயோன்' என்ற பெயரில், செயற்கை வைர நகைகளுக்கான புதிய கடையை திறக்க உள்ளது. இந்த கடையில், பிரத்யேகமாக பெண்களுக்கான கடிகாரம், வாசனை திரவியங்கள் மற்றும் சேலை, கைப்பை உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட உள்ளன. இதைதொடர்ந்து, டில்லி, மும்பையில் மேலும் சில கடைகளை திறக்க திட்டமிட்டு இருப்பதாக, பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது. ரூ.14,800 கோடி இழப்பீடு கேட்டு டாடா ஸ்டீலுக்கு நோட்டீஸ் நெ தர்லாந்தில் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவித்ததாக, டாடா ஸ்டீல் மற்றும் துணை நிறுவனங்களிடம் இந்திய மதிப்பில் 14,800 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, எஸ்.எப்.டபிள்யு., அமைப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நார்த் ஹாலந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், டாடா ஸ்டீல் ஆலையால் பாதிப்பு என தெரிவித்திருந்தது. ஆனால், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என டாடா ஸ்டீல் மறுத்துள்ளது. பாக்ஸ் சிலிகா சிலிகானில் இணைய இந்தியா ஆலோசனை பா க்ஸ்
சிலிகா சிலிகான் வினியோக தொடரில் இணைவது தொடர்பாக, அமெரிக்காவுடன் இந்தியா
ஆலோசித்து வருவதாக அமெரிக்க பொருளாதார விவகாரத்துறை அதிகாரி ஜேக்கப்
ஹெல்பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான இந்த அமைப்பில்
ஐரோப்பிய யூனியன், தைவான் இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியா இணைவதால்,
முக்கிய தாதுக்கள் மற்றும் செமி கண்டக்டர் தயாரிப்புக்கான மூலப்
பொருட்களுக்கு சீன இறக்குமதியை சார்ந்திருக்கும் சூழல் குறையும்.