உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  50 நாடுகளுடன் வர்த்தக பேச்சு

 50 நாடுகளுடன் வர்த்தக பேச்சு

புதுடில்லி : இருதரப்பு வர்த்தக மேம்பாடு தொடர்பாக, 50 நாடுகளை சேர்ந்த 14 வர்த்தக குழுக்களுடன் இந்தியா பேச்சு நடத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்ததாவது: இந்தியா, 50 நாடுகளின் வர்த்தக குழுக்களுடன் பேசியதன் அடிப்படையில் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்புடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி, அது, கடந்த மாதம் 1ம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. நான்கு ஐரோப்பிய நாடுகளுடன் இவ்வாறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது இதுவே முதன்முறை. இதற்கான பேச்சுகள் விரைவில் துவங்கும். அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் மேற்கத்திய சந்தைகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளையும் இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி