திருப்பூரில் துவங்கியது யார்னெக்ஸ் கண்காட்சி
திருப்பூர்:திருப்பூர் ஐ.கே.எப்., வளாகத்தில், தென் மாநிலங்களின் மிகப்பெரிய ஜவுளி தொழில் சார்ந்த 'யார்னெக்ஸ்' கண்காட்சி நேற்று துவங்கியது. நடப்பாண்டில் நான்கு பிரிவு சார்ந்த பிரமாண்ட கண்காட்சியாக, 319 அரங்குகளுடன் இது அமைந்துள்ளது. நுால் துறை சார்ந்த 'யார்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா' என்ற தலைப்பில் 'ஜவுளி சோர்சிங், டை கெம் டெக்ஸ்பிராசஸ்' என்ற தலைப்பில் ரசாயனம் மற்றும் துணைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் 'அப்பேரல் சோர்சிங்' என்ற கண்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியின் முக்கிய அம்சமாக, 'ட்ரெண்ட் போரம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுமையான துணிகள், நவீன வடிவங்கள், சீசன் வண்ணங்கள் மற்றும் நிலையான மற்றும் சுழற்சி ஜவுளி மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பேஷன் மற்றும் சோர்சிங் குழுக்களுக்கு இந்திய மற்றும் உலகளாவிய பேஷன் டிரெண்ட் அடிப்படையில் தகவல்கள் வழங்கப்படும். சிறந்த அரங்குகளுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் படைப்பாற்றல், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் தொலைநோக்கு தீர்வுகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இக்கண்காட்சி, நாளை மாலையுடன் நிறைவடைவதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.மீடியா கிருஷ்ணாமூர்த்தி தெரிவித்தார்.