உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / பி.என்.பி., கிரெடிட் கார்டு ரூ.25,000 வரை சேமிக்கலாம்

பி.என்.பி., கிரெடிட் கார்டு ரூ.25,000 வரை சேமிக்கலாம்

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் பேங்க், பண்டிகை காலத்தை முன்னிட்டு, அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை கிரெடிட் கார்டு செலவழிப்புக்கு சலுகைகளை வழங்குகிறது.பயணம், ஷாப்பிங், தினசரி அத்தியாவசிய பொருட்கள், லைப்ஸ்டைல் ஆகியவற்றுக்கு கிரெடிட் கார்டில் செலவழித்தால், அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை சேமிக்கலாம் என தெரிவித்துள்ளது.ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், விமான பயணம், ஹோட்டல், உணவு டெலிவரி ஆகியவற்றுக்கு கிரெடிட் கார்டில் பணம் செலுத்தும்போது, அதிகபட்சம் 27.50 சதவீதம் வரை சலுகைகளைப் பெறலாம்.எலக்ட்ரானிக் பொருட்கள்டெல், சாம்சங், சோனி, ரியல்மீ, குரோமா நிறுவன பொருட்களுக்கு 10 முதல் 27.50 சதவீதம் வரை, அதிகபட்சம் 25,000 வரை தள்ளுபடி.உள்நாட்டு விமான பயணம்12% - 15% வரை உடனடி தள்ளுபடி, அதிகபட்ச தொகை 1,800 ரூபாய் .சர்வதேச விமான பயணம்10% தள்ளுபடி, அதிகபட்சம் ரூ.7,500ஹோட்டல்கள்உள்நாட்டு ஹோட்டல் முன்பதிவுக்கு 15 -20% தள்ளுபடி, அதிகபட்சம் ரூ.5,000. வெளிநாடுகளில் 15%, அதிகபட்சம் ரூ.20,000இ-காமர்ஸ் ஷாப்பிங்பிளிப்கார்ட், மைந்த்ரா, பர்ஸ்ட்கிரை-யில் 10% தள்ளுபடி, கூடுதல் போனஸ் ரூ.1,250உணவு டெலிவரி, அத்தியாவசிய பொருட்கள் சொமாட்டோ 10%, அதிகபட்சம் ரூ.100. மளிகை 7% அதிகபட்சம் ரூ.200. பேடிஎம் வழியாக பில் செலுத்தினால் 10%, அதிகபட்சம் ரூ.150 தள்ளுபடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி