உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / இளைஞர்களை ஈர்க்கும் டிஜிட்டல் தங்கம்; செபி எச்சரித்தும் அதிகரிக்கும் முதலீடு

இளைஞர்களை ஈர்க்கும் டிஜிட்டல் தங்கம்; செபி எச்சரித்தும் அதிகரிக்கும் முதலீடு

நம் நாட்டில், நடப்பாண்டில் இளைஞர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் 12 டன் டிஜிட்டல் தங்கத்தை வாங்கியுள்ளனர். நே ஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனும் என்.பி.சி.ஏ., வழங்கிய தரவுகளின்அடிப்படையில், இந்த மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளதாகவும் உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.அதேநேரம், டிஜிட்டல் தங்கம் என்பது, எந்தவொரு அரசு அமைப்பின் நேரடி கட்டுப்பாட்டிலும் வராததால், இது முறைப்படுத்தப்படாத முதலீடு என, ஏற்கனவே செபி எச்சரித்துள்ளது. இதனால், கடந்த மாதம் முதல் டிஜிட்டல் தங்கம் விற்பனை சற்று குறைந்துள்ளது.இச்சூழலில், முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம், ஒரு சுயகட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. வரும் 2026ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள், இதற்கான புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகி றது.இதன் வாயிலாக, டிஜிட்டல் தங்கத்துக்கு ஈடாக, பாதுகாப்பான பெட்டகங்களில் தங்கம் இருப்பதை உறுதி செய்ய, அவ்வப்போது தணிக்கை செய்யப்படும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை