‘யு–டர்ன்’ அடித்த அன்னிய முதலீட்டாளர்கள்
நடப்பு ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் அன்னிய முதலீட்டாளார்கள் பங்குகளை விற்று வெளியேறிய நிலையில், நவம்பர் மாதத்தில் மீண்டும் திரும்பியுள்ளனர். என்.எஸ்.டி.எல்., வெளியிட்ட தரவுகளின்படி, நவம்பர் மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் 53,739 கோடி ரூபாயை இந்திய பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அதிகம் சாராத சந்தையாக இந்திய பங்கு சந்தை விளங்குவது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் நிதி சேவைகள், ஐ.டி., ஆட்டோமொபைல் மற்றும் டெலிகாம் துறை பங்குகள் நியாயமான விலையில் கிடைப்பதும், நீண்டகால மூலதன ஆதாய வரி மற்றும் எஸ்.டி.டி., வரிகளை குறைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அன்னிய முதலீட்டாளர்களை மீண்டும் முதலீடு செய்ய வைத்துள்ளது என கருதப்படுகிறது. முதலீடுகள் ஜூலை | ரூ.20,200 (முதலீடு)ஆகஸ்ட் | ரூ.29,631 (முதலீடு)செப்டம்பர் | ரூ.35,861 (வெளியேற்றம்)அக்டோபர் | 45,162 (வெளியேற்றம்)நவம்பர் (நேற்று வரை) | 53,739 (முதலீடு) குறிப்பு: * ரூ. கோடியிலா என்பது குறிப்பிட வேண்டும்