உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

நியுட்ரன்: வாங்க அப்பு, டவுனு. சொன்ன மாதிரியே என்னை வெறுமனே 'ஆ'ன்னு சந்தையை வேடிக்கை பார்க்க வச்சுட்டீங்களே! அது எப்படிங்க சொல்லிவச்ச மாதிரி, நிப்டி ஒரு நாள் ஏத்துகிற அளவுக்கே, அடுத்த நாளைக்கு இறக்குறீங்க? அந்த வித்தையை கொஞ்சம் சொல்லிக்குடுங்க. டவுனு: அதெல்லாம் எதேச்சையா நடக்கறது. நியுட்ரன்: சரி, அதைவிடுங்க. பல சமயம் அமெரிக்க சந்தைக்கு நேர்மாறா, நம்மூரு சந்தைய கொண்டு போறீங்களே, அதுவும் எதேச்சையாத்தானா? அப்பு: அமெரிக்க சந்தையை ஒட்டி நடந்த காலமெல்லாம் மாறிடுச்சு. உங்களுக்குத் தெரியாததா நியுட்ரன். எங்களை மாதிரியான உள்ளூர் ப்ளேயர்கள் நிறைய பேர் ரொம்ப ஸ்ட்ராங்கா ஆயிட்டோம். நியுட்ரன்: என்னவோ போங்க. நான் சந்தையில இருக்கறனா இல்லையான்னு எனக்கே டவுட் வந்துடுச்சு. ஆர்டர் போடவே மறந்துடும் போல இருக்கு. வர்ற வாரம் எம்3 பணப்புழக்கம், இண்டஸ்ட்ரீயல் மற்றும் மேனுபேக்சரிங் ப்ரொடக்ஷன், ஜிடிபி வளர்ச்சி விகிதம் என ஒரு சில இந்திய பொருளாதார டேட்டாக்களும் ப்ரொட்யூசர்ஸ் ப்ரைஸ் இண்டெக்ஸ், ரீட்டெயில் சேல்ஸ், டியூரபிள் குட்ஸ் ஆர்டர்ஸ் போன்ற ஒரு சில அமெரிக்க டேட்டாக்களும் வெளிவர இருக்கு. அப்பு: வார அடிப்படையில பார்த்தா 25,970, 25,860 மற்றும் 25,680-ல சப்போர்ட்டும் 26,220, 26,295 மற்றும் 26,400-ல ரெசிஸ்டென்சும் இருக்குது. நியுட்ரன்: இது என்ன புதுப்பழக்கம்? நீங்க சப்போர்ட்-ரெசிஸ்டன்ஸை சொல்றீங்க. இந்த வேலையைக்கூட எங்களுக்கு விட்டுவைக்க மாட்டீங்களா? டவுனு: யார் சொல்றாங்கறது மேட்டர் இல்லை. லெவல்கள் சரியா இருக்காங்கறதுதான் மேட்டரே. நியுட்ரன்: பார்றா! ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்குங்க. 26,100-ங்குறதுதான் இப்போதைக்கு நிப்டியோட முக்கிய லெவல். அதுக்கு மேலே போய், தொடர்ந்து வால்யூமோட நடந்தாதான் ஏற்றம் தொடரும். டவுனு: அதுக்கு வாய்ப்பு இல்லைங்க நியுட்ரன். செவ்வாய் கிழமை என்.எஸ்.இ.,ல நவம்பர் மாத எப் அண்டு ஓ., எக்ஸ்பைரி இருக்கு. அது வரைக்கும் வாய்ப்பு குறைவு தான். அப்பு: அதுக்கப்புறம் நிச்சயமா மேலே போயிடும். அதுல சந்தேகமேயில்லை. டவுனு: உங்களோட பேராசை பலித்திட என்னுடைய ஆசீர்வாதங்கள்! நியுட்ரன்: என்ன இப்படி ஆசீர்வாதமெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க? அப்பு: டெக்னிக்கலா ஒரு சில விஷயங்கள்ல வீக்னெஸ் தெரியறதாலயும்; 'பிராபிட் புக்கிங்' வர்றதுக்கு வாய்ப்பிருக்குங்கறதனாலயும், என்னை கிண்டல் பண்றாராமாம்! நியுட்ரன்: ஓ… அப்ப இந்த வாரத்தை டவுனுக்கு ஒதுக்கிடலாமா? அப்பு: இந்த மாதிரி விஷமத்தனமான பேச்சே கூடாது. வாராந்திர லெவல்ல நியுட்ரலாக்கூட போயிட வாய்ப்பிருக்கு. ஏன்னா நாங்க ரொம்ப எனர்ஜியோட இருக்கோம். டவுனு: எப்&ஒ எக்ஸ்பைரி-க்கு அப்புறம் செய்திகள்தான் நிப்டியோட மூவ்களை தீர்மானிக்கும். யாரோட எனர்ஜியாலயும் இந்த வாரம் சந்தை நடக்கப் போறதில்லை. நியுட்ரன்: மொத்தத்துல எனக்கு எதிர்காலம் டவுட்டுதாங்கிறீங்க! அப்பு: நாங்க ரெண்டு பேரும் ஓய்வெடுத்தா தான் உங்களுக்கு எதிர்காலம். அதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. அப்பு சொல்லிக் கொண்டிருக்கும் போதே “காரை சர்வீசுக்கு விட்டுட்டு வந்தேன்னீங்களே; வாங்க, நானே உங்களை வீட்டில டிராப் பண்றேன்,” என்று டவுனு அப்புவை அழைத்து செல்ல, அதை ஒரு நிமிடம் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு நியுட்ரனும் புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை