ஜெயேஷ் லாஜிஸ்டிக்ஸ் பங்கு விலை நிர்ணயம்
கொ ல்கட்டாவைச் சேர்ந்த ஜெயேஷ் லாஜிஸ்டிக்ஸ், 28.63 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. இதற்காக, பங்கு ஒன்றின் விலை 116 -- 122 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது. முதலீட்டாளர்கள் வரும் 27 முதல் 29ம் தேதி வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். இந்தியா -- நேபாளம் மட்டுமின்றி, நேபாளத்தின் எல்லையோர கிராமங்களில் சரக்கு போக்குவரத்தை கையாள்வதில், ஜெயேஷ் லாஜிஸ்டிக்ஸ் கவனம் செலுத்தி வருகிறது. நவ., 3ம் தேதி இந்நிறுவன பங்குகள், சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.