| ADDED : டிச 04, 2025 02:00 AM
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைய விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்குமான மாற்றியமைக்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. பண மோசடி மற்றும் தவறான பயன்பாட்டை தடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. * வெளிநாட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக என்.பி.எஸ்., கணக்கை துவங்கலாம் * நேரடி புகைப்படம், வசிக்கும் இடத்தின் ஜி.பி.எஸ்., இருப்பிடமும், வெளிநாட்டு முகவரியும் சரியாக இருக்க வேண்டும் * என்.ஆர்.ஐ.,களின் பாஸ்போட், முகவரி சான்றுகள் இந்திய துாதரகம் அல்லது நோட்டரி பப்ளிக் வாயிலாக சான்றளிக்கப்பட வேண்டும் * வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு, ஓ.சி.ஐ., அட்டை, வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆகிய இரண்டும் அவசியம் * கே.ஒய்.சி., படிவத்தை இந்தியாவுக்கு வராமல் ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம்.