மேலும் செய்திகள்
ரூ.25,000 கோடிக்கு அதானி உரிமை பங்கு
32 minutes ago
தரகு கட்டணத்தை உயர்த்த பண்டு நிறுவனங்கள் கோரிக்கை
33 minutes ago
சரிவிலிருந்து மீண்ட ரூபாய்
35 minutes ago
சிறப்பு முதலீட்டு பண்டு வெல்த் கம்பெனிக்கு ஒப்புதல்
45 minutes ago
'தேசிய பேமன்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' அதன் 'பீம்' செயலியில், 'யு.பி.ஐ., சர்க்கிள்' என்ற ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, குடும்பச் செலவுகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் சுலபமாகும். முக்கிய அம்சங்கள் * ஒரு குடும்பத் தலைவர் அல்லது தலைவி, தன் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுக்கு, தன் சொந்த வங்கிக் கணக்கிலிருந்து பணம் செலவழிக்க அனுமதி வழங்கலாம் *மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 15,000 ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கலாம் * இந்த அனுமதியை, அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை கொடுக்க முடியும் *இந்த வசதியைப் பயன்படுத்தும் மற்றவர்கள், ஒவ்வொரு முறை பணம் அனுப்பும்போதும், தலைமைப் பயனரின் அனுமதியை கேட்கத் தேவையில்லை *டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பழக்கமில்லாத மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும் *இதன் வாயிலாக, குடும்ப பணப் பொறுப்புகளை சுலபமாகப் பகிர்ந்து கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால், உங்கள் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் செலவு செய்துகொள்ள நிரந்தரமாக அனுமதி கொடுக்கும் வசதி தான், இந்த யு.பி.ஐ., சர்க்கிள்.
32 minutes ago
33 minutes ago
35 minutes ago
45 minutes ago