உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஏழு மாதங்களுக்கு பிறகு ரூபாய் மதிப்பு வலுவடைந்தது

ஏழு மாதங்களுக்கு பிறகு ரூபாய் மதிப்பு வலுவடைந்தது

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65 காசுகள் வலுவடைந்து, கடந்த ஏப்ரல் 10க்கு பிறகு முதல்முறையாக 93 ரூபாய் நிலைக்கு கீழ் 92.67 ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டு பங்குச்சந்தையின் வலுவான ஏற்றம், அன்னிய முதலீடு அதிகரிப்பு மற்றும் சர்வதேச அளவில் டாலர் குறியீடு சரிந்தது ஆகியவையே ரூபாயின் இந்த எழுச்சிக்கு மிக முக்கிய காரணங்களாகும். கடந்த நவம்பர் 13ம் தேதியில் இருந்த 94.19 ரூபாய் என்ற நிலையிலிருந்து தொடர்ந்து ஐந்து வர்த்தக நாட்களாக உயர்ந்து ரூபாய் கிட்டத்தட்ட 1.40 சதவீதம் வலுவடைந்துள்ளது. ரூபாய் மதிப்பு உயர்வது கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும். அதேசமயம், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் ஐ.டி., துறை நிறுவனங்களின் வருவாயில் இது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூ டும். எனவே, ஐ.டி. பங்குகளில் முதலீடு செய்பவர்கள் குறுகிய கால ஏற்ற இறக்கங்களை பார்க்காமல், வலுவான ‘ஹெட்ஜிங்’ பாதுகாப்பு கொண்ட நிறுவனங்களை தேர்ந்தெடுத்து கவனமாக செயல்படுவது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். லாபத்தில் பாதிப்பு ரூபாயின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருவதால், நடப்பு 2026–2027 நிதியாண்டில் இந்திய ஐ.டி., நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபத்தில் 4 முதல் 13 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படக்கூடும் என ‘கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ்’ ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை