உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / கிரெடிட் கார்டு செலவுகள் ஏப்ரலில் 5 சதவீதம் சரிவு

கிரெடிட் கார்டு செலவுகள் ஏப்ரலில் 5 சதவீதம் சரிவு

புதுடில்லி: கிரெடிட் கார்டு செலவுகள், கடந்த ஏப்ரல் மாதத்தில், கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்ததாக, ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.நாட்டில் கிரெடிட் கார்டு வாயிலாக மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிவர்த்தனைகளின் மதிப்பு, கடந்த மார்ச் மாதத்தில், 1.64 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்துக்கான மொத்த செலவு, 4.84 சதவீதம் சரிந்து, 1.56 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால், மார்ச்சில் செலவுகள் அதிகரித்தும், ஏப்ரலில் செலவுகள் குறைந்தும் காணப்படுவது வழக்கம்.மார்ச் மாதத்துக்கான செலவும் கூட, கடந்த அக்டோபர் மாத செலவை விட குறைவாகவே இருந்தது. பண்டிகை காலத்தையொட்டி, கிரெடிட் கார்டு செலவுகள் கடந்த அக்டோபரில், 1.79 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. நாட்டின் டாப் நான்கு கிரெடிட் கார்டு வழங்குனர்களான, எச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆகிய வங்கிகளின் கிரெடிட் கார்டு செலவுகள், முந்தைய மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரலில் 1.57 சதவீதம் குறைந்துள்ளது.கடந்த ஏப்ரலில், புதிதாக 7.37 லட்சம் கார்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2022 டிசம்பருக்கு பின், கடந்த மாதத்தில் தான் கிரெடிட் கார்டு சேர்க்கை வளர்ச்சி குறைவாக இருந்தது. 'கோ பிராண்டட்' கார்டுகளுக்கான விதிமுறைகளில், ரிசர்வ் வங்கி மேற்கொண்ட திருத்தங்கள், 'பெடரல்' மற்றும் 'சவுத் இந்தியன் வங்கி' ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகள் போன்றவற்றின் காரணமாக, புதிய கிரெடிட் கார்டு வழங்குதல் குறைந்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது.காலம் மொத்த செலவுகள் (ரூபாய் கோடியில்) புதிய கார்டுகள் (லட்சத்தில்)மார்ச் 24 1,64,586 12.02 ஏப்ரல் 24 1,56,498 7.37நாட்டில் மொத்த கிரெடிட் கார்டுகள் 10.25 கோடிமுன்னணி வழங்குனர்களின் ஏப்ரல் செயல்பாடுவங்கி மொத்த கார்டுகள் (கோடியில்) மொத்த செலவுகள் (ரூபாய் கோடியில்) புதிய கார்டுகள்எச்.டி.எப்.சி., 2.08 40,899 2,31,231எஸ்.பி.ஐ., 1.90 24,595 1,14,592ஐ.சி.ஐ.சி.ஐ., 1.70 29,404 53,581ஆக்சிஸ் 1.42 18,487 11,993(ஆதாரம் - ஆர்.பி.ஐ.,)கோ -பிராண்டட் கிரெடிட் கார்டு என்பது ஒரு சில்லரை விற்பனையாளர் அல்லது பிற வணிகம், கிரெடிட் கார்டு வழங்குபவர் அல்லது கிரெடிட் கார்டு நெட்வொர்க்குடன் இணைந்து வழங்கும் கார்டு ஆகும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ