உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / டீமெட் கணக்குகள் எண்ணிக்கை உயர்வு

டீமெட் கணக்குகள் எண்ணிக்கை உயர்வு

பங்குகள், பத்திரங்களை மின்னணு வடிவில் வைத்திருக்க தேவையான டீமெட் கணக்குகள் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தில் 31 லட்சம் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.பங்குச்சந்தை முதலீடு ஆர்வம் காரணமாக அண்மை காலமாக டீமெட் கணக்குகள் துவக்குவது அதிகரித்து வருகிறது. கடந்த காலாண்டில், ஒரு கோடிக்கும் அதிகமான டீமெட் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் 31 லட்சம் கணக்குகள் துவக்கப்பட்டு, மொத்த டீமெட் கணக்குகள் 15.45 கோடியை கடந்துள்ளன. இந்த போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மூலதன சந்தை மீதான நம்பிக்கையின் அடையாளமாக டீமெட் கணக்குகள் அதிகம் துவங்கப்படுவதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். அண்மை காலமாக பங்குச்சந்தை முதலீட்டில் ஆர்வம் அதிகரிப்பதும், இல்ல சேமிப்பில் ஒரு பகுதி சமபங்கு முதலீட்டிற்கு மாறியிருப்பதும் இதற்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன.டீமெட் கணக்கு துவக்குவது எளிதாகி இருப்பதும், இந்த ஆர்வத்திற்கு வலு சேர்த்துள்ளதாக கருதப்படுகிறது. புதிய முதலீட்டாளர்களின் வருகை, பங்குச்சந்தையின் நிலைத்தன்மைக்கு உதவும் என்றும் கருதப்படுகிறது. புதிய முதலீட்டாளர்களில் பலரும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்